காலசக்கரத்தின்
சாபச் சரித்திரத்தில்
கருப்பு பக்கங்களின்
துரதிஷ்ட எழுத்துக்களாய்
என் பெயர் கிறுக்கலாக…
பார்த்தவரையெல்லாம்
பழகியவெரல்லாம்
பாவியென நினைத்து
பாவச் செல்வம்
சேர்த்த மகாபாவி நான்…
தவறேது செய்தேனென்று
தவறாத தோளெல்லாம்
தவறென நினைத்தது
தவறானதால் தவறிவிழுந்த
தவறே நானாக…
புரியாத புதிரில்
புகுந்திக்கொண்ட என்னை
புரிந்தும் புரியாமலும் தேடி
அலைகிறேன் புரிந்தது
தொலைந்தது உடலன்று…
உலகமியங்குவது உன்
போன்ற உயிர்களாலே
உதிரம் கூட குறையும்
கூடும் உன் அன்பென்ன
மருத்துவ அளவுகோலா…
நன்றியுள்ளாதால்
நாயாவகாவது ஏற்றுக்கொள்
நாகரிகம் தவறி நல்வழி
நகர்ந்து நடந்தது
நானன்று நம் விதியே…
இருளின் இதிகாசத்தில்
சூழ்ச்சி அத்தியாயத்தில்
கொடூரமான பாத்திரத்தில்
வேஷம் தெரியாமாலே
நடித்துக் கொண்டிருக்கிறேன்…
தேடி தேடியே தொலைத்த
என்னை யார் கண்டுபிடிப்பார்
நீ விலகியதை உணர்ந்த போது
பூமி பந்து என் முன்னே ஒரு
நீலநிற கோளி உருண்டையாய்…
குற்றம் சொல்லி சொல்லியே
குற்றவாளியான எனக்கு
குறைந்தபட்ச தண்டனையென
குற்றுயிராக்கினாலும்
குற்றம் என்னுடையதல்ல…
காத்திருப்பேன் உனக்காக
நீ வரும்வரை, ஏற்றிவிட்ட
படிகளை கால் பட்டதற்காகவே
கண்ணீராலே கழுவுபவன் நான்
இன்று உனக்காக கண்ணீருடன்…